Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூன் 29 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மடு - இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் பெரியகமம் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago