2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’’அதிபரை நியமியுங்கள்’’ பெற்றோர் கோரிக்கை

Freelancer   / 2022 ஜூலை 12 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயத்திற்கு அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த ஜனவரி மாதத்தில் இப்பாடசாலையின் அதிபர் இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

துணுக்காய் கல்வி வலயத்தில் அதிபர் இல்லாத பாடசாலைகளுக்கு வடமாகாண கல்வி திணைக்களத்தினால் அதிபர்கள் நியமிக்கப்பட்ட போதும், அதிபர்கள் பணியினை பொறுப்பேற்பதில்லை எனவும், இதற்கான முக்கிய காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாமை சுட்டிக் காட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர் தரத்துடன் உள்ளவர்களை அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .