Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், பாரிய தீவிபத்து ஒன்று, இன்று (18) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும் குறித்த விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, வயல் நிலங்கள் தீக்கிரையாகின.
தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகை காரணமாக, ஏ9 வீதியில் சிறிதுநேரம் பயணத்தடை ஏற்பட்டது.
சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதால், பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தீயணைப்புப் பிரிவினர், சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago