2025 மே 16, வெள்ளிக்கிழமை

அரிச்சல்முனைக்குச் சென்றவர் கைது

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னாரில் இருந்து  படகு மூலம் தனுஸ்கோடி அரிச்சல் முனைக்குச் சென்றதாகக் கூறப்படும் மொஹமட் உசேன் (வயது-68) என்பவரை, நேற்று (21) காலை மெரைன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து   தனுஸ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் மொஹமட் உசேன் (வயது-68) என்பவரை  நேற்றுக் காலை, தலைமன்னாரில் இருந்து சென்ற படகு இறக்கி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து தகவல் அறிந்த மெரைன் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று, ஊடுருவியவரை கைதுசெய்தனர்.

இவரிடம்  மெரைன், கியூபிரிவு, உளவுத்துறை சுங்கத்துறை உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர், இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்தவரெனவும் தற்போது திருச்சியில் வசித்து வருவதாகவும் புடவை வியாபாரத்துக்காக  இலங்கை சென்றதாகவும் தற்போது போக்குவரத்து முடக்கப்பட்டதால்  30 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இலங்கை படகில் இந்தியாவுக்கு வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .