2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அழுகிய நிலையில் யானையின் உடல் கண்டுபிடிப்பு

க. அகரன்   / 2018 ஏப்ரல் 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பூவரசங்குளம், செங்கல்படை கிராமத்தில் யானையின் உடல் ஒன்று நேற்று (19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கிராமவாசிகளால் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் அழுகிய நிலையில் யானையின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த யானை இறந்தமை தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X