Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, பெற்றோர்களாலும் மாணவர்களாலும், இன்று (24) காலை 8 மணிக்கு, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ், சித்திரம், சங்கீதம், இரண்டாம் மொழி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இதேவேளை, 342 மாணவர்கள் கல்விகற்கும் நிலையில், 20 ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் உள்ளனர்.
குறிப்பாக ஆரம்பப் பிரிவில், 105 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில், 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு வலியுறுத்தி, பாடசாலை வாயிலைமூடி, பாடசாலைக்கு முன்னால், மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் சி.சிவகரன், கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இதற்கானத் தீர்வை ஒரு வாரத்தில் பெற்றுத்தருவதாக தெரிவித்ததாக உறுதியளித்தார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago