Freelancer / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த நபர் வீதியில் கிடந்த 95,000 பணத்தினை எடுத்து கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்திருந்த நிலையில், மேற்படி பணத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் குறித்த பணம் இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் குறித்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வீதியில் கிடந்து எடுத்த பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு நல்லுள்ளம் கொண்டவரை பலரும் பாராட்டியுள்ளனர். R


24 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
31 minute ago