2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆனந்தசங்கரியின் காணிகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியையே, இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள மக்கள், வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து பாதிக்கப்பட்ட தமக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடம் தொடர்பில் பிரதேச செயலகத்துக்கு வீ.ஆனந்தசங்கரி காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்வேறு இழப்புகளை சந்தித்த மக்கள், வேறு காணிகள் இன்றி எனது காணியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் சட்ட ரீதியாக குறித்த காணியில் ஆட்சி செய்யாவிடினும் அவர்களின் பாதிப்பு நிலையை தான் உணர்வதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எனது காணியில் குடியிருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் தன்னை சந்தித்து காணிகளை பகிர்ந்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்களின் இந்த துன்பமான நிலையில் வேறு இடங்களுக்கு அனுப்பி காணியை பெற்றுத்தர கோரும் மனநிலை எனக்க இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எனக்கு சொந்தமானதென குறித்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள காணியை, அங்கு குடியிருக்கும் மக்களுக்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .