2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடைநிறுத்தபடாது’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில் இதுவரை 143 மாதிரி கிராமங்களில், 4,329 வீடுகள் அமைக்கபட்டுள்ளதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் வி,எம்.வி.குருஸ், எந்தவொரு காராணத்துக்காகவும் ஆரம்பிக்கபட்ட வீட்டுத் திட்டங்கள் இடை நிறுத்தப்படமாட்டாதெனவும் கூறினார்.

வவுனியா வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தில், நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போரால் பாதிக்கபட்ட மக்கள் வவுனியா நோக்கி வருகைதந்த நிலையில், அவர்களுக்கான வீட்டுத் தேவைகள்  முழுமையாகக் கிடைக்கபெறவில்லையெனவும் எனவே அவர்களையும் கருத்தில் கொண்டு 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு வீடமைப்பு அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இதேவளை,  வவுனியா மாவட்டத்தில் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆம் கட்ட நிதி விடுவிக்கபடாமல் உள்ள மாதிரி கிராமங்களுக்கு மிக விரைவில் நிதி வழங்கபடவுள்ளதாகத் தெரிவித்த அவர்,   ஆரம்பிக்கபட்ட வீட்டுத் திட்டங்கள் எந்த காராணத்துக்காகவும் இடைநிறுத்தப்படாதெனவும் கூறினார்.

அத்துடன், கிராமங்களில் தனியாக வீடுகள் தேவையானவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமது தலைமை அலுவலகத்தில் இது தொடர்பில் அறிவிக்கபட்டால், தனி வீடுகளை வழங்குவதற்கு முயற்சிசெய்வோமெனவும் கூறினார்.

எதிர்வரும் காலங்களில், கிராம்மட்டங்களில் சமூக அமைப்புகளை உருவாக்கி, அதனூடாக வீடு இல்லாதவர்களின் விவரங்கள் பெறப்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .