2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இசைமாலைதாழ்வு விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2022 நவம்பர் 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியோரத்தில் உள்ள மரமொன்றின் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13) காலை 9 மணியளவில்   இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த  பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .