Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் கல்வித்திணைக்களத்தின் கீழ், புத்தளத்தில் இயங்கி வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும், அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும், குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும், வட மாகாண சபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம், அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கிகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷா்ட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், இன்று திங்கட்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் ஏற்பாட்டில், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ரிஷாட் பதியுதீன், மேலும் உரையாற்றுகையில், “புத்தளத்தில் அமைக்கப்பட்ட இணைந்தப் பாடசாலைகளில் ஒரு சிலவற்றில், சுமார் 1,000 மாணவர்களும் இன்னும் சில பாடசாலைகளில் சுமார் 300 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். இந்தப் பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றனர்.
வட மாகாணத்தில் சமாதான சூழல் ஏற்பட்ட போதும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மக்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறுவதிலுள்ள தடைகள் எல்லோருக்கும் தெரியும். எடுத்த எடுப்பில் இந்தப் பாடசாலைகளை மூடிவிட்டு மாணவர்களை அந்தரத்தில் விட முடியாது.
புத்தளத்தில் இயங்கும் இந்தப் பாடசாலைகளை வட மாகாணசபை நிர்வகிப்பதால் அந்த சபை தமக்கு பாரிய கஷ்டம் என அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றது. இதனாலேயே அந்தச்சபையின் சுமையைக் குறைப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
21 minute ago