2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, வடமாகாண நீர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென, வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்துக்கு எவளவு சவாலானதாக இருக்கிறதென்று அனைவருக்கும் தெரியுமெனவும் இதற்காக பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டிய தேவை இருப்பதாகவும், அவர் கூறினார்.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும், 2030ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான நீரின் அளவு 70 எம்.சி.எம் மாத்திரமேயெனத் தெரிவித்த அவர், தற்போது வடமராட்சியில் ஒருமுறை பெய்யும் மழையின் வீழ்ச்சியின் போது, 128 எம்.சி நீர் விழுவதாகவும் கூறினார்.

இங்கு இருக்கின்ற அனைத்து திணைக்களங்களும் அமைச்சுகளும், மழையில் தங்கியிருக்கின்ற முயற்சியை மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

இது ஒரு தேசிய அளவிலான பாரிய பிரச்சினையெனத் தெரிவித்த அவர், இது தமது நாகரிகம் சம்பந்தமானதுடன், எதிர்காலம் தொடர்பானதுமானுமெனவும் கூறினார்.

எனவே. இதற்கு தீர்வு காண்பதற்கு, அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .