2025 மே 21, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரையும், ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன், இன்று உத்தரவிட்டார்.

நேற்று மதியம் கச்ச தீவை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு விசை படகுடன் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் நாள் வரை காரைநகர் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தனர்.

பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, அவர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களை இன்றையதினம்  ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .