2025 மே 15, வியாழக்கிழமை

இந்தியாவில் கல்விகற்ற 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தில், இந்தியாவுக்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என, வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அண்மையில் அரச வேலைவாய்ப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பெயர்ப் பட்டியல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டு இருந்ததுடன், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விவரங்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

அந்தவகையில், இலங்கை போரின்போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்று அங்குள்ள பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விண்ணப்பங்களும் குறித்த பட்டியலில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் -27, வவுனியா - 18, யாழ்ப்பாணம் -66, முல்லைத்தீவில் - 2 பேருமாக மொத்தம் 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பட்டம் என்ற காரணத்தை முன்வைத்தே, அவர்களுக்கான தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .