Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜூலை 24 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையில் உள்ள பாத்திரத்தில் பொலித்தீன் பொதியினால் சுற்றப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் நேற்று (24) மீட்கப்பட்டன.
உணவுப்பொதியாக இருக்குமென நினைத்து அதனை அவர்கள் எடுத்து பார்த்தபோது, அதற்குள் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன.
அனைத்தும் புதிய துப்பாக்கி ரவைகளாக காணப்படுவதுடன், இதனை யார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளார்கள்.
கேப்பாபிலவு பகுதியில் நீண்டகாலமாக படையினர் வசம் உள்ள தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் இந்திராணி என்பரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு படை முகாமிற்கு முன்னால் உள்ள இவர்களின் வீடு மற்றும் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் இவர்களின் மற்றுமொரு பூர்வீக காணியில் படையினர் ஆக்கிரமித்து அங்கிருக்கும் வளங்கள் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த காலங்களில் தங்களின் காணிக்காக போராடிவந்த இவர்கள் இன்றும் தங்கள் சொந்தக் காணிகளில் இருக்கம் படையினரை வெளியேற்றி தங்கள் காணிகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்கள்.
இந்நிலையில் இவரின் வீட்டுக்குள் எவ்வாறு துப்பாகி ரவைகள் வந்தன என்பது ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளதுடன், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திராணி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025