2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3ஆம் பிட்டி பிரதான வீதியில், இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் வழங்கியுள்ளார்' என அப்பிரதேச மக்கள் முறையிட்டுள்ளதாக, வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

'சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறித்த காணி, செவ்வாய்க்கிழமை மதியம், நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் அளவை செய்யப்பட்டு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன' என அப்பிரதேச மக்கள் கூறியதாக, மாகாண சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

'இராணுவ முகாம் அமைப்பதற்குக் காணி தேவை என, இராணுவத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த காணி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட காணிக்குச் சற்றுத் தொலைவிலேயே பஸ் நிலையம் உள்ளதாகவும் அங்கு செல்ல யுவதிகள், பெண்கள் அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் தொடர்புகொண்ட போது, இராணுவத்துக்கு காணி வழங்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளார்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .