Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
சர்வதிகார இராணுவ ஆட்சியைச் சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி, தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அரச படைகளாலும் சிங்கள இன வெறியர்களாலும் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்களெனவும் அந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் வணக்கம் செலுத்தி அரசியல் பயணத்தைத் தொடர்வதாகவும் கூறினார்.
இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுவார்த்தை இல்லை என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி பயணிக்குமெனத் தெரிவித்த அவர், தங்களுடன் சேர்ந்த பயணிக்க விரும்புகின்றவர்கள் பயணிப்பார்களாக இருந்தால், அவர்களுடன் தளத்தில் வேலைசெய்ய பயணிக்க தயாராக இருக்கின்றோமெனவும் கூறினார்.
“ஆனால், ஒரு சிலர் அரசாங்கத்துடன் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுடன் அவர்கள் நிற்பார்களாக இருந்தால், தமிழ்த் தேசிய இனத்தின் பெயரில் வந்தாலும் கூட அவர்களுடன் எந்த ஒட்டும் உறவும் இருக்காது.
“இன்று ஒரு கொடுமையான சர்வதிகார இராணுவ ஆட்சி ஏற்படுத்தக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்திருக்கின்றது. இதனை நாங்கள் தனித்து நின்று எவராலும் தடுக்கமுடியாது. சேரக்கூடியவர்கள் சேர்ந்து இதனை எதிர்கவேண்டும். இதற்கு மக்களை அணிதிரட்டி சர்வதேச நாடுகளின் உதவியினை பெற்று எங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுத்துவார். அதற்கு நாங்கள் எல்லோரும் துணை நிற்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago