Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சப் பிராந்திய இரத்த வங்கிக்கு, இராணுவத்தினரே அதிக குருதி வழங்குனர்களாக உள்ளதாக, இரத்த வங்கியினர் தெரிவித்தனர்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர்கள், மாதாந்தம் 150 பைந்த் குருதி தேவையாக உள்ளதாகவும் ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பைந்த் வரையான குருதிகளே கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் நாள்தோறும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கிளிநொச்சி இரத்த வங்கிக்கு வருகை தந்து குருதி வழங்க முடியுமெனவும், அவர்கள் கூறினர்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் குருதித் தேவை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த இரத்த வங்கியினர், தமது இரத்த வங்கிக்கு இராணுவத்தினரும் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்களுமே பிரதானமான இரத்தம் வழங்குநர்களாக இருப்பதாகவும் கூறினர்.
அத்துடன், ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரும் மாதாந்தம் சுமார் 20 பைந்த் குருதியை வழங்குவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று, யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் 150 பைந்த் இரத்தமும் 24ஆம் திகதியன்று துணுக்காய் இராணுவத்தினர் 80 பைந்த் இரத்தமும் 14ஆம் திகதி பரந்தன் இராணுத்தினர் 80 பைந்த் இரத்தமும், 25ஆம் திகதி கிளிநொச்சி இராணுவத்தினர் 70 பைந்த் இரத்தமும் வழங்கவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
இராணுவத்தினரிடமிருந்து இவ்வாறு நாளாந்த தேவைகளுக்காகக் குருதியைப் பெறுவது கடந்த காலங்களில் தவிர்க்கப்பட்டிருந்தாகவும் பேரிடர் அவசரகால நிலைமைகளின் போது, அவசரகால சேமிப்பாக படையினரே செயற்படுவர் என்பதே இதற்கான காரணமெனவும், அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் மாதாந்தம் இவ்வாறு குருதி பெறுவது அவசரகால நிலைமைகளில் நெருக்கடியை ஏற்படுத்துமெனவும், அவர்கள் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
55 minute ago
56 minute ago