Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - வைரவபுளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்குள் நேற்றய தினம் உள்நுளைந்த திருடர்கள், அங்கிருந்து பணத்தையும் பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
நேற்றயதினம் இரவு வியாபார நிலையங்களை மூடிவிட்டுசென்ற அதன் உரிமையாளர்கள், இன்று காலை மீண்டும் அதனை திறக்கமுற்பட்டபோது, கதவை உடைத்து பொருள்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்பாடல் நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணமும், அலைபேசி அட்டைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர், பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அத்துடன், அதற்கு அருகாமையில் இருந்து வர்ணப்பூச்சு விற்பனை நிலையம் ஒன்றை உடைத்த திருடர்கள், அங்கிருந்த பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதேவேளை, அதேபகுதியில் அமைந்திருந்த சிகை திருத்தும் நிலையத்தின் கதவையும் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago