2025 மே 15, வியாழக்கிழமை

இருவேறு விபத்துகளில் மூவர் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், நேற்றும் (02) இன்றும் (03) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான  வீதியில், பாரவூர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில்,  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்தார்.

இவ்வாறு காயமடைந்தவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று (03) காலை கிளிநொச்சி டிப்போ வீதியில்  ரயில் நிலைய கடவைக்கு அருகில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோ குடைசாய்ந்ததோடு, சிறுவர்கள் இருவர் சிறு காயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .