2025 மே 05, திங்கட்கிழமை

இலங்கைக்கு கடத்தவிருந்த மாத்திரைகள் கைப்பற்று

Princiya Dixci   / 2022 ஜூலை 28 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்நாடு, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திக் கொண்டு வர இருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

150 மில்லி கிராம் நிறையுடைய சுமார் 443 அட்டைகளில் இம் மாத்திரைகள் காணப்பட்டுள்ளன.

தூத்துக்குடி,  திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மாத்திரை கடத்தவிருத்த படகில் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் படகு மற்றும் மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளதாகவும் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய், கடலட்டை மற்றும் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில், தற்போது மாத்திரை கடத்தலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X