2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலஞ்சம் பெற்ற OIC கைது

Freelancer   / 2025 மே 22 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து நேற்றைய தினம் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்துள்ளனர். 

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

அவரை இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X