2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வீதியை திறந்து விட இணக்கம்

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து சரணாலயத்துக்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வீதியை, மீண்டும் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடுவதற்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம், மார்ச் மாதம் 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

இந்த  வீதியை பொதுமக்கள் பாவனைக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து, 2010ஆம் ஆண்டு, சூழலியல் வனவளப் பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை, இன்று இடம்பெற்றது.

இதன்போது,  இவ்வீதியைத் திறப்பதில் மனுதாரர்கள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிட விருப்பம் தெரிவித்ததை அடுத்தே, ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக, சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்தார்.

வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர், வீதிப் போக்குவரத்து அதிகார சபை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் இடையீட்டு மனு தாரர்களாக மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, முசலி பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .