2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர்கள் மத்தியில் 'மாவா' விற்பனை அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

போதையை ஏற்படுத்தக்கூடிய 'மாவா' என அழைக்கப்படுகின்ற ஒரு வகைப் பாக்கு, மன்னாரில் இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பஸார் பகுதியில் குறித்த போதைப்பாக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு சரைப் மாவாப் பாக்கு, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இந்தப் போதைப்பாக்கினை இளைஞர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும், தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனவே, மன்னார் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் குறித்த போதையை ஏற்படுத்துகின்ற 'மாவா' பாக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .