2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’உதவிகளை சரியாக பயன்படுத்தவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கொடையாளர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள், அதனைச் சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டுமென, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தெரிவித்தார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தாய் - தந்தையரை இழந்த மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு நிதியை வழங்கி வரும் ஏடு நிறுவனத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், நேற்று (15), கூட்டுறவுச் சபை மண்டபத்தில் யாழ்., தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முதல்வர் தி. வரதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அவர்கள்  வெளிநாடுகளிலே உள்ளர்கள். தமது உழைப்புகளை ஏடு என்ற இந்த அமைப்பினூடாக மாணவர்களின் கல்விக்காக வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளின் பௌதீக மற்றும் ஆளணி  வளங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .