Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சுமந்திரனுக்கு உருப்படியான அறிவிருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டாரென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உபதலைவர்களில் ஒருவரான க.சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
வவுனியா நகர சபைமண்டபத்தில், நேற்று (26) நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கூட்டமைப்பில் இருந்தபோது அரசாங்கத்தால் தமக்கு பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டனவெனவும் அந்த உறுதிமொழிகளைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோஅமனவும் அது நிறைவேறவில்லையெனவும் கூறினார்.
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற எண்ணத்தில் மைத்திரிக்கு வாக்களித்து ஓர் ஆட்சி மாற்றம் உருவாக்கப்பட்டது. ஒரு ஜனாதிபதி சாதாரணமாக அரசியல் கைதிகளாக இருக்கின்றவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கமுடியும்.
“அவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் முன்னம் இடம்பெற்றிருந்தது. அதைக்கூட அவர் செய்யவில்லை. அது நடப்பதற்கு நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் எவரும் கடுமையாக உழைக்கவில்லை.
“அரசாங்கத்தின் பங்காளிகளாகச் செயற்பட்டு வந்த கூட்டமைப்பால், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளில் ஒன்றுக்காவது தீர்வைப் பெறமுடிந்ததா என்றால் இன்றுவரை இல்லை என்பதே உண்மை” எனவும், சுரேஷ் தெரிவித்தார்.
அவர்கள் ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு கதைகளை பேசிவருகின்றனர். அரசியல் காலகட்டங்களில் சில நேரங்களில்தான் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் ஏற்படுமெனத் தெரிவித்த அவர், அந்தக் காலப்பகுதியில் தாம் அவற்றை செய்து முடிக்க வேண்டுமெனவும் இன்று அந்த நிலைமை இல்லை எனவும் மாறாக சிங்கள மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்ற அரசாங்கமே இன்று இருக்கிறதெனவும் கூறினார்.
பிரபாகரன் கேட்பதை நீங்கள் கேட்டால் ஒருபோதும் தரமுடியாது என்று அவர்கள் கூறுகின்றார்களெனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் அது தீவிரவாதம் தனிநாட்டு கோரிக்கை என்று நீண்டகாலமாக அவர்கள் கூறுகின்றார்களெனவும் தனிநாடு கேட்டு தமிழர்கள் போராடியது உண்மையெனவும் கூறினார்.
ஆனால் இன்று ஜனநாயகப் பேராட்டத்தில் இருக்கக் கூடியவர்கள் கூறுகின்றார்களெனத் தெரிவித்த அவர், நாடுபிளவுபடாமல் இருப்பதற்கு ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்கள் தங்களது ஆட்சி அதிகாரங்களைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சமஷ்டி அரசியல் அமைப்புமுறை வேண்டும் என்றெனவும் கூறினார்.
“ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமஷ்டிக்கும் தனிநாட்டுக்கும் எவ்வாறான வேறுபாடுகள் இருக்கின்றது என்பது நன்கு தெரியும். ஆனால், அதனை கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றார்கள். சிங்கள அரசாங்கம் இறங்கிவந்து தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்காது” எனவும், அவர் தெரிவித்தார்.
எனவே, அவர்களுக்குச் சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், போர் குற்றம் விசாரிக்கப்பட வேண்டுமெனவும் அப்போதுதான் அவர்களது வண்டவாளங்கள் வெளியில்வருமெனவும் கூறினார்.
அப்போதே தமிழ் மக்களின் கௌரவமாக வாழ்வதுடன் அவர்களுக்கான நீதி கிடைக்கக்கூடய சூழல் உருவாகுஅமனத் தெரிவித்த அவர், அந்தச் சூழலையை தாம் உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.
“இலங்கை அரசாங்கத்தால் சம்பந்தன் தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருந்தார். புதிய அரசியல் சாசனத்துக்காக நான்கரை வருடங்கள் ஏமாற்றபட்டார்கள். நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள் என்று நாம் சொன்னோம். ஆனால் சுமந்திரனோ, மாவையோ, சம்பந்தனோ அதனைக் கேட்கவில்லை. ஆனால் இன்று ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்” எனவும், சுரேஷ் தெரிவித்தார்.
உண்மையில் அவர்கள் மடையர்களாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால் சுமந்திரன் தன்னை அறிவாளி என்றே விளம்பரம் செய்கின்றாரெனவும் அவருக்கு உருப்படியான அறிவு இருந்திருக்குமானால் இப்படியான மோசமான நிலைமைக்கு இடமளித்திருக்கமாட்டார் என்றே தாங்கள் கருதுவதாகவும் கூறினார்.
இவற்றை தாம் மாற்றியமைக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதும் தமிழ் தலைமைகள் ஏமாறிவிட்டோம் என்று சொல்வதும் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் எனவே தமது சிந்தனையில் நடவடிக்கையில் அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டுமெனவும் கூறினார்.
47 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
49 minute ago
1 hours ago