2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உழவு இயந்திரம் மீட்கப்பட்டது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சியில் கடந்த 7ஆம் திகதி களவாடப்பட்ட இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி - பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வாகனம் காணாமல் போயிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் விசுவமடு புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள இராணுவ  முகாமிற்கு அருகாமையில், வீதி ஓரமாக குறித்த உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தில் பல உதிரிபாகங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .