Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் இயங்கிவரும் ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க.பார்த்தீபனின் வாகனத்தின் மீது, நேற்று (31) இரவு, இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக, வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில், அரச அதிகாரிகளினால் காணி மோசடிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு வவுனியா பிரதேச செயலாளரின் தலையீடு உள்ளதாகவும் தெரிவித்து, மேற்படி பார்த்தீபனால், பல்வேறு தரப்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான விசாரணையொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோதே, பூங்கா சந்தியில் வைத்து, அவரது வாகனத்தின் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சி.சி.டிவி கமெராவின் உதவியுடன், பொலிஸார் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago