Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுவதாகவும், குறித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரி 'இலங்கையன்' எனும் பெயரில் கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மன்னார் நகர சபையில் தற்போது மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகலவான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறுவர் பூங்கா உட்பட பல பொது இடங்களில் புலிகளின் தேசிய கலரான சிவப்பு, மஞ்சல் பூசப்பட்டுள்ளது.
“மன்னார் மக்கள் வங்கிக்கு பின் புறமாக தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளில் பல கடைகள், மாவீரர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.
“இவ்வாறான செயல்கள் இனியும் தொடரக் கூடாது.மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் அன்பளிப்புகள் முன்னுரிமைகள் அளிக்கப்படக்கூடாது. நிறுத்தப்பட வேண்டும்.
“உங்களுக்குறிய அரச கடமையை மட்டும் சரியாக செய்யவும்.உங்கள் அனைவரையும் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவிக்கையில்,
“மக்களுக்கான பணிகளை நாங்கள் நேர்மையாகவும், கன்னியமாகவும், கட்டுக்கோப்புடனும் மேற்கொண்டு வருகின்றோம்.நாங்கள் எந்தவித அச்சுருத்தல்களுக்கும் அடி பணியப் போவதில்லை.
எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும்,எமது பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago