Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் மாவட்டத்தில் தடைகள் இன்றி அரச மற்றும் தனியார் துறையினருக்கு எரிபொருள்களை சீரான முறையில் விநியோகிப்பது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல், மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று (04) காலை இடம்பெற்றது.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி உரிய முறையில் எரிபொருளை வழங்க அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அரசாங்க அதிபர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
அரச, தனியார் போக்குவரத்து சங்கம், மீனவ அமைப்புகள், வெதுப்பக உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர்கள், மன்னார் மின்சார சபை அத்தியட்சகர், மன்னார் வைத்தியசாலை தரப்பு பிரதேச செயலாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின் தடங்கள் அமுலாக்கபட்டுள்ள நிலையில், மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்களை சீரான வகையில் சகல தரப்பினருக்கும் உரிய முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
அத்துடன், மாவட்டத்தில் உள்ள உள்ள மீனவர்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கும் உரிய முறையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை மாவட்டத்தில் திடீரென மின் தடங்கள் ஏற்படுகின்ற போது உடனடியாக அவசர தேவைகளுக்கு எரிபொருளை வழங்கவும், குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைக்கு தேவையான எரி பொருளை சிரமங்கள் இன்றி பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago