Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியிலிருந்து, சட்டவிரோதமாக வைத்திருந்த 1,018.9 கிலோகிராம் நிறையுடைய உலர்ந்த கடலட்டைகளை, நேற்று (17), கடற்படையினரும் மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்ததோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
எருக்கலம்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த உலர்ந்த கடலட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அனுமதித்த அளவை மீறி, அதிகளவு கடலட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலர்ந்த கடலட்டைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்டக் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago