2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

எல்.டி.டி.ஈ பயங்கரவாதி என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டதால் சர்ச்சை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன், மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு அண்மையில் எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதமானது குடும்பநல சுகாதார உத்தியோகத்தரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப்பட்டதோடு, அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து எல்.டி.டி.ஈ பயங்கரவாதி' என குறிப்பிட்டு குறித்த கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் எல்.டி.டி.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

பலரை பழிவாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல், மாதாந்த சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவரால் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பணியாளர்கள் விடயத்தை வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ளமையால் அவர் நாட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .