க. அகரன் / 2019 மார்ச் 05 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கே காணப்படுகின்றது. இதனால் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தவரை எங்கள் மக்களது விடுதலை, பிரச்சனைகள் வெல்லப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம். எங்கள் மக்களது பிரச்சனைகளை நாம் சர்வதேசத்துக்கு தெளிவாக சொல்லி வருகின்றோம். அதேபோல் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் பொறுப்பு கூற வேண்டும். அந்தவகையில் கால நீடிப்பு என்பது இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற செயற்பாடாக மாறும். அழுத்தங்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். கால நீடிப்பு வழங்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
3 minute ago
15 minute ago
22 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
22 minute ago
33 minute ago