2025 மே 22, வியாழக்கிழமை

ஒட்டுசுட்டான் கோவில் திருவிழாவில் குண்டர்கள் அட்டகாசம்

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட அலகரை முருகன் கோவிலின் வருடாந்தத் திருவிழா நிகழ்வுகள் நேற்று (24) இடம்பெற்ற நிலையில், திருவிழாக் கூட்டத்துக்குள் புகுந்துள்ள கும்பலொன்று, அங்கிருந்த உபகரணங்களைச் அடித்துச் சேதமாக்கியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

காவடிகள், கோவில் ஒலிபெருக்கிகள், பறைகள் என்பவற்றையே அக்கும்பல் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும், இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று திருவிழாவின் போது, காவடி இடம்பெற்றுள்ளதோடு, இரவு வேளையில், “மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து” என்பன நடைபெறவுள்ள நிலையிலேயே, மேற்படி கும்பல் உள்ளே புகுந்து, அங்கிருந்த உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன், பறை அடித்தவர்களையும் தாக்கியுள்ள அக்கும்பல், அங்கிருந்து புறப்படும்போது, கோயில் வளாகத்திலிருந்த கடைகள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .