2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஒதியமலைக்கு பேருந்து வேண்டும்

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு ஒதியமலைக் கிராமத்துக்கு 13 ஆண்டுகளாக ஒழுங்காக பேருந்து சேவைகள் இடம் பெறுவதில்லை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 
 
1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம் பெற்ற நிலையில் இக்கிராம மக்கள் இடம் பெயர்ந்து 2010 ஆம் ஆண்டில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது பாடசாலையும் இயங்கி வரும் நிலையில் இக்கிராமத்துக்கான  பேருந்து சேவைகள் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக இக்கிராம மக்கள் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கோ தண்டுவான் கிராமத்தில் மாதந்தோறும் நடைபெறுகின்ற மகப்பேற்று பெண்களுக்குரிய சிகிச்சைகளுக்கு செல்வதற்கோ முடியாத நிலைமை காணப்படுகின்றது.
 
இது தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கூட்டங்களில் கதைக்கப்பட்டால் தனியார் பேருந்து சேவைகள் ஒரு வாரத்திற்கு மட்டும் இக்கிராமத்திற்கு வந்து செல்லும். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஒதியமலைக் கிராமத்துக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து வந்து செல்லக் கூடியவகையில் ஒருங்குப்படுத்தித் தருமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 
 
இக்கிராமத்தில் காணப்படுகின்ற போக்குவரத்து நெருக்கடி காரணமாக துணுக்காய் கல்வி வலயத்தினால் ஒதியமலை பாடசாலைக்கு நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதில் பின்னடிப்பதாகவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X