2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஒரு வருட பூர்த்தியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Editorial   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் (20) 1 வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளைத் தேடி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (20) ஒரு வருடம் கடந்த நிலையில் 366 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோர் எங்கும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X