2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘கச்சல் சமனங்குளத்தில் விஹாரை நிர்மாணம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா வடக்கு – கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரைகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றம், இது, எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடாக இருக்கிறதெனவும் கூறினார்.

வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றத்துக்கும் வவுனியா மாவட்டச் செயலாளர் எம். ஹனீபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், நேற்று  (02) நடைபெற்றது.

இதன்போதே, அம்மன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்ரைத்த மன்ற உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில், தமிழ்மக்களின் பூர்விக கிராமமான கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரை அமைக்கும் பணி இடம்பெற்றுவருதாகவும் அதேவேளை, புதிய கட்டடங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இது, எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடாக அமையுமெனத் தெரிவித்த அவர்கள், எனவே இது தொடர்பாக நீங்கள் (மாவட்டச் செயலாளர்) கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால் பாதிக்கபட்டுள்ள பெண்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டச் செயலாளரிடம், அவர்கள் வலியறுத்தினர்.

இதையடுத்து, தேர்தல் முடிந்த பின்னர், நுண்நிதி விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் இணைத்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் எம். ஹனீபா, கச்சல் சமனங்குளம் தொடர்பாகவும் ஆராய்வதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X