Princiya Dixci / 2022 ஜூலை 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்நாடு - இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முடை கடலில் மிதந்து வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 50 கிலோகிராம் என்றும் இது எப்படி கடலில் மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல் காரர்கள் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார்களா என்ற கோணத்தில், இந்திய கடலோர காவல் படையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago