2025 மே 05, திங்கட்கிழமை

கடல் உணவு விலை அதிகரிப்பு

Freelancer   / 2022 ஜூலை 17 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில் கடல் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் கிடைக்காததனால் பல மீன் பிடிப் படகுகள் கரையில் காணப்படுகின்றன. 

கடல் உணவுகளின் விலை இதனால் 2,000 ரூபாயை தாண்டி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் எரிபொருளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் 2,000 ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டது.  

அதன் பின்பு எரிபொருள் வழங்கப்படாததன் காரணமாக கடலுக்கு மீன் பிடிப்பதற்கு கடற்றொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.  

சில கடற்றொழிலாளர்களினால் மீன் பிடிக்கப்பட்டாலும் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முல்லைத்தீவின் கடல் உணவு கிராமங்களுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்ட நிலையில் தற்போது எரிபொருள் நெருக்கடி காரணமாக முல்லைத்தீவின் கிராமங்களுக்கு கடல் உணவு வருவதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

கடற்றொழிலாளர்களுக்கும் எரிபொருளினை முதன்மையாக பெற்றுக் கொடுப்பதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X