Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துக் காணப்படுவதால், நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பஸ் நிலையம், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் 25-35க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதால் போக்குவரத்தில் ஈடுபடுவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேநேரம், இந்த கட்டாக்காலி நாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதேவேளை, நகரப்பகுதியில் அதிகரித்துக் காணப்படும் நாய்களால், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், பெருமளவானோர் நாய்கடிக்கு இலக்காகியும் வருகின்றனர்.
முல்லைத்தீவு நகரத்தில் உள்ள படைமுகாம்கள் பொலிஸ் நிலையம், போன்ற பகுதிகளில் இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுவதாக, பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025