Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கராயன்குளம் பிரதேசத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மத்திய நிலையத்தின் கட்டுமானத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களின் நிறங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரிய மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இவ்வாறான குறைபாடுகளை சீர்செய்யாது அதனை வலயக் கல்வி திணைக்கள நிர்வாகம் பொறுப்பேற்று, எதிர்வரும் 21ஆம் திகதி, செயலமர்வை நடத்தவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதாவது சுமார் இரண்டு கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் இதற்கான கட்டுமானப் பணிகள், 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
மேற்படி பாரிய பகுதிகளில், கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அதன் தரம் மற்றும் சீரற்ற கட்டுமானப்பணிகள் தொடர்பில் உரிய அரிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.
குறிப்பாக விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் பூரத்தி செய்யப்படாமை மற்றும் கட்டடச் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை கீழ்த்தன மற்றும் மேல் தளவேலைகள் சீரின்மை எனப் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
இவற்றைக் கவனத்தில் எடுக்காது வலயக்கல்வி நிலைய நிர்வாகம் அதனை பொறுப்பேற்றுள்ளதுடன், ஆசிரிய வள நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்காது ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை நடத்துவதற்கு எத்தணிப்பது என்பது தரமற்ற கட்டுமானங்களை மூடிமறைப்பதாகவும், பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறான குறைபாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினால், கடந்த 8ஆம் திகதி பொதுக்கணக்காய்வு பிரிவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago