2025 மே 16, வெள்ளிக்கிழமை

கனகராயன்குளத்தில் விபத்து: பொலிஸ் உட்பட இருவர் பலி

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா - கனகராயன்குளம் ஏ9 வீதியில், இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் நல்லூர் - அரசடி வீதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி திசிகாந்தன் எனவும், இவர் மட்டக்களப்பில் பணியாற்றுபவர் எனவும், கனகராயன்குளம் பொலிஸார் கூறினர்.

இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர், விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குப் பிறிதோர் இளைஞருடன், இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது அதிகாலை 5.30 மணியளவில், கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது, அந்தப் பொலிஸ் உத்தியோகத்தரும் அவருடன் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிசான் யனுஸ்டன் என்ற இளைஞனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .