2025 மே 22, வியாழக்கிழமை

கரைதுறைப்பற்று பகுதிகளில் புயல்

Editorial   / 2019 மே 11 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில், வியாழக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது

இதன்போது வீசிய கடும் காற்று காரணமாக கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் மூன்று வீடுகளும் நாயாறு பகுதியில் அமைந்திருக்கின்ற மீனவர்களுடைய வாடிகள் எட்டும்  அந்த பகுதியில் அமைந்திருக்கும்  கிறிஸ்தவ தேவாலயமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக நேற்று (10) முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உடைய அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X