2025 மே 05, திங்கட்கிழமை

கர்ப்பிணித் தாய்மாருக்கு எரிபொருள்

Freelancer   / 2022 ஜூலை 10 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு, எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கஸ்டமான நிலை மற்றும் விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணித் தாய்மாருக்காக எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

ஏனையவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள மருத்துவ தாதிகளின் உதவியுடன் அருகில் உள்ள சிகிச்சை நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெறவும், அல்லது போக்குவரத்துக்காக நோயாளர் காவு வண்டியை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X