2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – முள்ளியவளை, குமுழமுனை மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த உதவி வழங்கும் நிகழ்வு, இன்று குமுழமுனை மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஜெயவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வவுனியா நகர சபையின் உபதவிசாளர் சு.குமாரசாமி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

.குமுழமுனைப் பிரதேசத்தில் போக்குவரத்து சீரின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வறுமைகோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்கிவிக்கும் முகமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் குமுழமுனை பிரதேச இணைப்பாளர் சேரனின் ஒழுங்கு படுத்தலில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் படிப்பதற்கான மேசை, கொப்பிபோனா உள்ளிட்ட புத்தகபை, சைக்கிள் என 150 மாணவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .