2025 மே 22, வியாழக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனியவாழ்வு இல்லத்தின் பழைய மாணவர்களால், இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக, இன்று, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதற்கமைய,

01) நிருவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்பட வேண்டும்.

02) நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிருவனம் ஒப்படைக்கப் பட வேண்டும்.

03) நிர்வாக செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பதை நிருத்த வேண்டும்.

04) பழைய மாணவர்கள் நிபந்தனை அற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்பட வேண்டும்.

05) அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிருத்த வேண்டும்.

06) சமூக சேவை திணைக்களத்தின் அரச உத்தியோகத்தாக  இருந்து தொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும்

07) மக்கள் பிரநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையில்  இருந்து வெளியேற வேண்டும்.

08) 11 உறுப்பினர்களை  கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக  பழைய மாணவர்கள் நிபந்தனை அற்ற வகையில் இணைக்கப்பட வேண்டும்.

09) மேற்குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும், பழைய மாணவர்கள் இருவருமாக இணைத்தே குழு அமைக்கப்பட வேண்டும். 

10) ஆயினும் இலக்கம் 06,07 ஆகிய கோறிக்கைககள் உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X