2025 மே 21, புதன்கிழமை

’காடழிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் கிராமத்தில், தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்படுவதாக, பொதுஅமைப்புகள் அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தும் இது கட்டுப்படுத்தப்படவில்லை என, பொதுஅமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஐயன்கன்குளத்தில் பொலிஸ் காவல் பிரிவு உள்ள போதும், மரம் வெட்டுபவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் காரணமாகவே, மரம் வெட்டுதல், மணல் அகழ்வு என்பன சட்டவிரோதமாக நடைபெறுகின்றன.

இது தொடர்பாக கடந்த பத்தாண்டுகளாக துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட்டத்தின் இணைத்தலைவர்களும் துணுக்காய் பிரதேச செயலாளரும் காடுகள் அழிக்கப்படும் இடங்களைப் பார்வையிடுவதாக முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்படவில்லை.

எல்லாவற்றையும் விட வனவளத் திணைக்களத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் காடுகள் அழிக்கப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கூட்டங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில் நடைபெறுகின்ற காடழிப்பு, மணல் அகழ்வு என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுஅமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .