2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘காடுகள் அழிக்கப்பட்டும் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – புத்துவெட்டுவான், முதிரைச் சோலைப் பகுதியில், பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அழகழ்வு செய்யப்படுகின்ற போதும் தமது பகுதிகளில் எந்தவித அபிவிருத்திகளும் இல்லை என இதனைச் சூழவுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான் – மருதன்குளம், ஐயன்கன்குளம் போன்ற கிராமங்களை அண்மித்துக் காணப்படுகின்ற புத்துவெட்டுவான் - முதிரைச்சோலை  பகுதியில், பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிரவல் அகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் இந்தப் பிரதேசத்தில் 25 தொடக்கம் 30 அடி  ஆழத்துக்கு மேல் இவ்வாறு கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கிக் காணப்படுகின்றன.

இவ்வாறு பாரிய குழிகள் காணப்படுவதால், எதிர்காலத்தில் கால்நடைகள் வீழ்ந்து இறக்கக்கூடிய ஆபத்து நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் தினமும் தமது பகுதியில் இருந்து பெருமளவான கிரவல் மண் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதும், தமது கிராமத்துக்கான பிரதான போக்குவரத்து வீதி கூட இதுவரை புனரமைக்கப்படாத நிலையில், பத்து வருடங்களாக தமது போக்குவரத்துகளில் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .