2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காட்டுமரங்கள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட கோட்டைக்கட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் பகுதிகளில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாக காணப்படுகின்ற கோட்டைகட்டியகுளம், ஐயன்கன்குளம், தென்னியன்குளம் போன்ற பகுதிகளில் காணப்படும் பெருமளவான இயற்கை வளங்கள் நாளாந்தம் அழிக்கப்பட்டு வருகின்றன என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதாவது, இந்தப் பகுதிகளில் உள்ள நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பெருமளவான காட்டுமரங்கள், கனரக இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு, அவை சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றித் தெரியாது என்றும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இந்தப் பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற மரக்கடத்தல்களை விட மணல் கிரவல் என்பனவும் பெருமளவில் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரிகள் தொடர் மௌனம் காட்டுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .