2025 மே 21, புதன்கிழமை

’காட்டுயானைகளின் அச்சத்துடன் பயணிக்கிறோம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, பனங்காமம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராமங்களில் இருந்து நட்டாங்கண்டல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் தினமும் காட்டுயானைகளின் அச்சத்துடன், காட்டுவழியால் பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மூன்றுமுறிப்பு, இளமருதன்குளம், கொம்புவைத்தகுளம், பனங்காமம் சிறாட்டிகுளம் ஆகிய விவசாயக் கிராமங்களில் உள்ள தரம் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமக்கான கல்வி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, நட்டாங்கண்டல் பாடசாலை மற்றும் பாணடியன்குளம் ம.வி.போன்ற பாடசாலைகளுக்கே தினமும் சென்று தமக்கான கல்வி வசதிகளை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை நாள்களில் தினமும் காலையில் சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் அடந்த காட்டினூடாகவும் மாலையில் பாடசாலை முடிந்து அதே வழியாகவும் சைக்கிள்களில் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் காட்டுயானை தொல்லைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, குறித்த கிராமங்களுக்கான பிரதான வீதியாக காணப்படும் வீதிகள் அனைத்தும் காடுகளால் சூழப்பட்ட வீதிகளாகவே காணப்படுகின்றன. இதனால் தினமும் தாங்கள் காட்டுயானைகளின் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X